Saturday, September 28, 2013

ரயிலென்னும் பெருவிருட்சம்



வனுக்கு வீடு செங்கல்பட்டுப் பக்கம்அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பக்கத்து மில்லில் கூலி வேலைகூடப் பிறந்தவர்கள் இல்லைஅவனுக்கு முன் ஒரு பையன் பிறந்து ஆறு நாளில் ஏதோ பெயர் தெரியாத காய்ச்சல் வந்து இறந்ததாக ஒரு சொந்தக்கார அக்கா சொல்லியிருக்கிறார்காஞ்சிபுரம் செல்லும் தண்டவாள பாதைக்கு அருகில் அவர்களுக்கு சொந்தமாகச் சிறிய வீடு இருந்ததுஅவனுக்கு ஆறு வயது ஆகும் வரை தான் அங்கு இருந்தார்கள்.அப்போதெல்லாம் அவன் ஆயா  வாசலிலேயே உட்கார்ந்திருப்பாள்அப்பாவும் அம்மாவும் வேலைக்குப் போன பிறகுஅவனை மேய்க்கிற வேலை ஆயாவுக்குஅரை டவுசர் பாதி புட்டத்தில் நழுவி நிற்க ஒரு கையில் அதைப் பிடித்தபடி மறுகையால்அரை மணிக்கொரு முறை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாய் செல்லும் மின்சார ரயிலுக்கு ட்ராஃபிக் போலீஸ் வேலை பார்ப்பது அவன் வழக்கம். "அந்தப் பரங்கிப் பசங்க வுட்டுட்டுப் போன பேய்ப்பக்கம் போவாதடாஆள அடிச்சி தின்னுரும்", என்று ஆயா அவனை அதட்டுவாள்அவளுக்குப் பேருந்தோரயிலோ எதுவும் பிடிக்காதுஆனால் விசித்திரங்கள் நிறைந்த தொலை தூர மாய நகரத்துக்குத் தன்னை எடுத்துச் செல்லும் விந்தை வாகனமாகவே அவன்ரயிலைப் பார்த்தான்ராட்சதக் கம்பளிப்பூச்சியைப் போல கடந்து சென்று தூரத்தில் புள்ளியாக மறையும் அந்த வாகனம் அவனைப் பெரிதும் ஈர்த்தது.

ஓடற்ற நத்தை


வழமையாகக் கழியும் தினங்களில் 
கரியைத் தோய்த்தது 
வானவிழ்த்த நீர்த்திரைகள்

நனைந்த மேனிகளை விட்டு
நழுவிக் கலைந்தன 
சில ஆழ்ரகசிய நிறங்கள் 

விளக்கணைத்த 
வீட்டுக் கதவுகள் வழியாக 
சிதறிய திரவத்திவலைகளை
எதனுடன் உருவகப்படுத்துவதென
தீர்க்கமாக யோசிக்கிறது
ஒவ்வொரு வாசலிலும்
விழுந்துறங்கிக் கொண்டிருக்கும் வீதி

பாதையோரப் பள்ளங்கள் 
குவித்த நீரில் 
பதுங்கியபடி துரத்துகிறது
புசித்த பின்னும் 
மீதமிருக்கும் பசியையொத்த
எனது பாதி பிம்பம்

சிறு சாரல் மழையின்
சங்கேத முணுமுணுப்புகளுக்கு
இருசெவிகளையும்
இரவல் கொடுத்தவாறு
ஒத்தையாய் ஊர்கிறது
நெடிய இரவு
சந்தடி மிகுந்த
சாலையைக் கடக்கும்.
ஓடற்ற நத்தையைப் போல !

- அவனி அரவிந்தன் 

தவழும் மணற்குன்றுகள்


ஆதிக்காலம் தொட்டு பாலைவனம் என்பது மர்மம் சூழ்ந்த பகுதியாகவே பார்க்கப்படுகிறது. சில எகிப்திய, பாரசீகக்கதைளை வாசிக்கும் போது மனக்கண்ணில் மணல்மேடுகள் எல்லாம் சாத்தானின் மேனியாக உருப்பெற்றிருக்கும். பிணந்தின்னிக் கழுகுகளின் பார்வை உயரத்தில், பொங்கி வரும் கடலின் அலைகள் மணலாக உறைந்து நிற்பதைப் போல அந்த மணல்சரிவுகள் தோற்றமளிக்கும். பாலைவனமானது தன்னைக் கடக்க நினைக்கும் வெற்றுத் துணிச்சல்காரர்களையும், வழிதவறி வந்தவர்களையும், வாழ்க்கையை வெறுத்தவர்களையும் வேறுபாடின்றி தன் வறண்ட நாக்குகளைச் சுழற்றி விழுங்கிவிடும் வல்லமை உடையது. அது எண்ணிலடங்கா கதறல் ஒலிகளையும் கோர மரணங்களின் சாட்சிகளையும் புயல்காற்றின் உக்கிரத்தின் வழியாக வெளிப்படுத்துகிறது. அத்தகைய நிலத்தில் வசித்து வாழ்வதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க இயலாது. ஆனால்

அற்றகுளத்து அறுநீர்ப்பறவை


ரண்டு கட்டெறும்புகள் சேர்ந்து என் கண்களை உருட்டிப் போவது போன்ற கனவுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்பாவும் கூட வந்திருந்தார். தனியான பயணங்களில் நான் அப்பாவை எவ்வளவோ வெறுத்திருந்தாலும், அருகில் இருக்கையில் எனக்கு அவர் மேல் கோபமே வந்ததில்லை. யாருக்குமே அவரைப் பார்த்தால் கோபம் வராது. பிறவியிலேயே அப்படி ஒரு முகம் அவருக்கு.

நட்சத்திரங்களின் மீளாவுறக்கம்



பனிப்புகையடர்ந்த கானகத்து 
வித்திலைத் தாவரங்களின்
கூரிய இலைகள் உரசும் இடைவெளியில்
பச்சைக் கேள்விகள் மலிந்த
நம் உரையாடல் பிரசவிக்கின்றது
வாதங்கள் குறுகி நுழையும்
பாறைகளின் இடுக்கில்
உருவற்ற நம் எண்ணப் படிமங்கள்
வைகறை வானத்துடன்
நிறம் மாறிக் கொண்டிருக்கின்றன
திசை பிரிவதற்கான ஒத்திகையை முடிக்குமுன்
விடுபட்டுப் பறந்த வார்த்தைகள்
கருநீல வெளியைக் கிழித்துப் பாயும்
ஒளிக்கற்றைகளிடமிருந்து ஒளிந்து தப்பி
நிழலைத் தேடித் திரியும்
எதிர்பாராத ஒரு நொடியில்
சட்டென்று 
நிசப்தத்தின் ஓர் அலையிலேறி
நட்சத்திரங்களின் 
மீளாவுறக்கத்தில் சாய்ந்துவிடுகின்றன
இணக்கத்தைத் தொழுது நிற்கும்
வேர்விட்ட கண்கள் பற்றிய சலனமின்றி !


- அவனி அரவிந்தன்.

நரகாசுரனும் நானும்


"தாத்தா இருக்காரா ?"
என்ற கேள்வியைச் சுமந்து 
ஓடி வந்த பிஞ்சு விரல் 
என் கன்னத்தை வருடுகிறது
மூச்சின் வெப்பத்தை 
பதிலாக அள்ளிக் கொண்டு
கொலுசுச் சலங்கைகள் அதிரும்படி
பட்டாசுகளை பற்ற வைக்க 
பரபரத்து ஓடியது

மரணத்தைப் போற்றும் பொன்னாளில் 
என் உலக விடைபெறுதலை
ஒத்திவைத்திருக்கிறேன் உற்றவர்களுக்காக
அவ்வகையில் 
நரகாசுரன் மட்டுமல்ல 
நானும் தான்
இன்றைய திருநாளின் திரி

பலகாரங்களும் பிள்ளைகளும்
எண்ணையில் குளித்த மணத்தை
என்னால் நுகர முடிந்தது
நான் இன்னும் குளிக்கவில்லை
படையலுக்கு வைத்த பணியாரம் போலவே
கிடத்தி வைத்திருந்தார்கள் என்னையும்
பண்டிகையின் பகல் பொழுது
பிரித்தெடுத்த வெடிச்சுருளாக
வெறுமையுடன் கழிந்ததெனக்கு

விளக்குகளால் பின்னப்பட்ட வாசலில்
என் பேத்தி பட்டுப் பாவாடையணிந்து நிற்கிறாள்
அவள் பாதங்களிடையில் விழுந்து மரணிக்கும்
மத்தாப்புகளை உதிர்த்த கம்பியில்
என் தீபஒளி கரைந்து கொண்டிருக்கிறது

நிலவில்லாத இருண்ட வெளியை
பெரும் ஓசையுடன் மலரும்
கணக்கில்லாத ஒளிப்பூக்கள்
கணநேரம் அலங்கரித்து மறைகின்றன

வேட்டுச் சப்தத்திற்கு மிரண்ட நாயைப் போல
உயிரை இழுத்துப் போர்த்தியபடி
பின்னிரவில் 
படுக்கையின் மீது சுருண்டுகிடக்கிறேன்
கண் மயங்கும் நேரத்தில்
அழுந்த அடைத்த
கதவுகளுக்கு அப்பால்
வானத்தில் உயர்ந்து
கந்தக நெடியுடன்
வெடித்துச் சிதறுகிறேன் நான் !

- அவனி அரவிந்தன்

மந்திரக்காரனின் புறா

வண்ணப் படிமங்கள் படர்ந்த 
மின் திரையின் 
அம்புக்குறித் தீண்டலில்
கலங்கிக் கலைகிறதென் 
கனவுகளின் கன்னித்தன்மை

விரல்களைக் குதறியெடுத்து
விரைந்தோடும் எலிகளை
விரட்டிப் பிடித்து
பொறிக்குள் அடக்குமுன்
தட்டச்சிய எழுத்துகள் 
வார்த்தைச் சட்டங்களில் இருந்து
தாவிக் குதித்து மறைகின்றன

சொல்நஞ்சுகள் துருத்தியபடி கிடக்கும்
மென்பஞ்சு இருக்கையில்
புரையோடிக் கிடக்கின்றன
காயங்கள் புசித்த நுண்ணுயிரிகள்

குளிர் ஊடுருவும் தேகத்தில்
தூண்டிலின் உறுத்தல்களோடே
ஆழத்தில் நீந்திக் கொண்டிருக்கிறேன்
உறவுகளின் உடைந்த மிச்சங்களுக்கிடையில் 

பின்னிரவுத் தேநீரின்
பித்த மயக்கத்தில்
ஒரு மந்திரக்காரனின் புறாவாக
இறகுகளின் படபடப்பில்
எனது சுதந்திரத்தை 
உதிர்த்துக் கொண்டிருக்கிறேன்
அகழ்ந்தெடுத்த தரவுகளின் குவியலில்
அவை குப்பையாய் விழுந்து மரிக்கின்றன !

- அவனி அரவிந்தன்