Wednesday, February 20, 2013

ஒரு பகல் ஒரு இரவு

ஒரு பகல்.
                  சுண்டு விரல் கனமே ஆன கம்பிகள் அவன் அறையின் சன்னலுக்கு வாய்க்கப் பெற்றிருந்தன. துருப்பிடித்த ஹைதர் அலி காலத்துக் கம்பிகளாக இருந்தாலும் காலையில் சூரியன் துணிச்சலுடன் உள்ளே வந்து வணக்கம் சொல்லியது. அது வரும் போது நிச்சயமாக அவன் கண்விழித்திருக்கவில்லை. வேறு வழியில்லை. அவன் வணக்கத்திற்கு கதிரவன் காத்திருக்கத் தான் வேணும். எழுந்தவுடன் கண்ணைக் கசக்கிவிட்டு வணக்கம் சொல்வதற்கு யத்தனித்தான். தூக்கக் கலக்கத்தில் மங்கலாகத் தெரியும் சன்னலுக்கு நேரெதிர் இருக்கும் சுவற்றைப் பார்த்தான். பழைய சன்னலாக இருந்தாலும்