Thursday, December 31, 2009

பழைய வீடு -- கவிதை


வசியம் இல்லாவிடினும்
மாதம் ஒரு முறையாவது
தவறாமல் செல்கிறேன்
தேரடி வீதியில்

குடுகுடுப்பைக்காரனுக்கு
பயந்து ஓடிய
குறுக்குத் தெரு கூட
முகமறந்த நண்பனைப் போல
என்னைக் குறுகுறுவென்று பார்க்கிறது

மிதிவண்டியிலிருந்து
விழுந்த தடம்
ஊர்திகள் விரையும்
இந்தத் தார்ச்சாலைக்கு அடியில்
எங்கோ புதைந்து கிடக்கிறது
முழங்கைத் தழும்பை
தடவிக்கொள்கிறேன்

போகுமுன் பதியனிட்ட மாமரம்
வாசலை ஒட்டி
இருபதடிக்கு வளர்ந்திருக்கிறது
அதன் நிழலில்
யாரோ ஒருத்தி
கைக்குழந்தையுடன் நிற்கிறாள்
அந்த நிழல்
எனக்குச் சொந்தமில்லை

அளவுக்கு அதிகமாக
அரிதாரம் பூசிக்கொண்டு
ஒரு அடிகூட நகராமல்
அதே இடத்தில்
மாறுவேடம் பூண்டு நிற்கிறது
கடனுக்கு முங்கிப் போன
எங்கள் பழைய வீடு!

வெளியிட்ட சென்னை ஆன்லைனுக்கு நன்றி !
http://tamil.chennaionline.com/literature/poem/newsitem.aspx?NEWSID=7f6ce5eb-00ea-4d71-83de-84e36deda464&CATEGORYNAME=kavi

7 comments:

Ashok D said...

இதன் வேதனை எனக்கு நன்றாக புரியும்.. நானும் அப்படித்தான் தவறவிட்டவன்

தமிழ் said...

படிக்கும் பொழுதே கடினமாக இருக்கிறது

அவனி அரவிந்தன் said...

வருகைக்கு மிக்க நன்றி அசோக் மற்றும் திகழ் !

thiyaa said...

அருமை
நல்ல நடை
நல்ல பதிவு
வாழ்த்துகள்

Arunkumar said...

பல நினைவுகளை (மிதிவண்டியும் குறுக்குத்தெருவும்) அசைபோட வைத்தது,,, நல்ல நடை :)

தேவன் மாயம் said...

அளவுக்கு அதிகமாக
அரிதாரம் பூசிக்கொண்டு
ஒரு அடிகூட நகராமல்
அதே இடத்தில்
மாறுவேடம் பூண்டு நிற்கிறது,
கடனுக்கு முங்கிப் போன
எங்கள் பழைய வீடு...!//

வாழ்த்துக்கள்! ரசித்துப்படித்தேன்!

அவனி அரவிந்தன் said...

@தியா, அருண், தேவன் கருத்துக்கு மிக்க நன்றி !

Post a Comment

கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.