கருப்புநிறக் களிறுகளாக
கார்முகில்கள் ஒன்றுகூடி
வாரியிறைக்கும் வான்மழை
இல்லை இல்லை
இது வன்மழை !
கண்ணிவெடியும் காடையர்களும்
தின்று போட்ட மிச்சத்தை
வென்று விழுங்கும் ஆசையில்
அடாது பெய்யும் விஷத்துளிகள்
ஈரங்களற்ற மண்ணில்
ஒட்டாமல் விழுகின்றன
வியர்வையிலும் குருதியிலும்
நனைந்த துணிகளுக்கு
மழைத் தண்ணீரை
அடையாளம் தெரியவில்லை
ஆனாலும் கேள்வியில்லாமல்
நனைந்துகொண்டன.
தாரிச்சிட்டுகளை
விரட்டித் திரிந்த குட்டிகளின்
குண்டுக் காயங்களில் கலந்து
தார்ப்பாய் முகாம்களை திசைபிரித்து
சீழ்ரத்தத்துடனும் சீற்றத்துடனும்
ஓடும் மழைநீரில்
காகிதக் கப்பலொன்று
அனாதியாய் முங்கிக் கிடக்கிறது
கனமழை ஓய்ந்துவிட்டது
அங்கு கன்னங்களெல்லாம்
இன்னும் நனைந்தபடியே !
வெளியிட்டதற்கு நன்றி யூத்புல் விகடன்:
http://youthful.vikatan.com/youth/Nyouth/arvind19102009.asp
6 comments:
கவிதையை படிக்கும் போதே இதயத்தில்
வலி பரவுகிறது...
சொற்களின் ஆளுமை மிக அதிகமாக இருக்கிறது கவிதையில்...
தாரிச்சிட்டுகளை
விரட்டித் திரிந்த குட்டிகளின்
குண்டுக் காயங்களில் கலந்து,
தார்ப்பாய் முகாம்களை திசைபிரித்து
சீழ்ரத்தத்துடனும் சீற்றத்துடனும்
ஓடும் மழைநீரில்
காகிதக் கப்பலொன்று
அனாதியாய் முங்கிக் கிடக்கிறது...//
FANTASTIC....::))
கவிதை வலியை உணர்த்துகிறது..
//கனமழை ஓய்ந்துவிட்டது
அங்கு கன்னங்களெல்லாம்
இன்னும் நனைந்தபடியே//
அருமை அவனி அரவிந்தன்
பாராட்டுக்கள் யூத்புல் விகடனில் வெளி வந்ததற்கு
கமலேஷ், பலா பட்டறை, பூங்குன்றன், தேனம்மை அனைவரின் வருகையும் எனக்கு பெருமையே ! கருத்துக்களுக்கு மிக்க நன்றி :)
அழுகைவருது
அருமையான கவிநடை
Post a Comment
கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.