யாதுமற்ற வெளியில்
ஆடைகள் களைந்த
அழகின் நிர்வாணம்...
வெட்கம் பாராட்டாத ஒளி
மேனியெங்கும்
திரையாகப் படர்ந்தது...
உச்சிப் பொழுதுகளில்
பரிமாறிக்கொண்ட
மதுமோகப் பார்வைகள்
அந்திவேளைகளில்
வண்ணம் பெற்றுப்
பரவசமாகின்றன...
ஆயுள் பத்திரிக்கையின்
முதல் பக்கம்
இந்தக் காதலைக் கொண்டே
அச்சடிக்கப்பட்டிருக்கிறது...
மொழியும் ஒளியும்
ஓய்வெடுக்கும்
சாமத்தின் நிலவறையில்
ஒவ்வொரு இரவும்
பிழையின்றி நிகழ்கிறது
ஒரு கோடி கூடல்கள்
விழாக்கால விருப்பத்துடன்...
நிலை மறந்து
மிதந்து செல்லும்
மனமயக்கப் பயணத்தின் நீட்சியில்
அதிகரித்துப் போகிறது
பல கோடி ஊடல்கள்
கடுங்குளிரின் நடுக்கத்துடன்...
குடை ராட்டினத்தில்
சுற்றிக்கொண்டிருப்பதால்
ஒருவரை ஒருவர்
விலகிச் செல்ல
ஒருவழியுமில்லை...
இந்தக் காவியத்தின்
கடைசி வரி
துரிதகதியில் கொதிக்கும்
உயிர்த்திரவம் தொட்டு
எழுதப்படுகிறது...
ஆவி நோக
அழுது தீர்த்த
ஆழிவந்து சூழ
யுகம் யுகமாய்த் தீட்டிய
ஓவியத்தின் வண்ணங்கள்
தடயமின்றிக்
கரைந்து போகிறது
காற்று மட்டுமே சாட்சியாக...
முதலைத் தொடங்கியவர்களே
முடித்தும் வைக்கிறார்கள்...
வானமே ஆதாம்
பூமியே ஏவாள்...!
25 comments:
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்....கவிதை சிறப்பாக வந்துள்ளது...
நன்றாக இருக்கிறது
வாழ்த்துகள்
வெற்றி பெற வாழ்த்துக்கள்..
வெற்றி பெற வாழ்த்துக்கள்..
//மொழியும் ஒளியும்
ஓய்வெடுக்கும்
சாமத்தின் நிலவறையில்//
அருமை அரவிந்தன்
வெற்றி பெற வாழ்த்துக்கள்
அருமை..வெற்றிபெற வாழ்த்துக்கள்..
கவிதை மிகவும் அழகா இருக்கிறது...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
பாலாசி, திகழ், கும்க்கி, வாசமுடன், தேனம்மை, சக்தி, சங்கர், கமலேஷ் அனைவருக்கும் என மனமார்ந்த நன்றி ! மீண்டும் வருக...!
வாழ்த்துக்கள்!
நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் அரவிந்தன்
நான் இல்லே நான் இல்லே.
கவிதை ரொம்ப நல்லா வந்திருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள் அரவிந்தன்
காற்றுமட்டுமில்ல நாங்களும் சாட்சி உங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்...
உழவன், அசோக், நவாஸுதீன், வசந்த் எல்லோருக்கும் என் பிரியமான நன்றிகள் !
வரிகளனைத்தும் மிக அருமை.
வெற்றி பெற வாழ்த்துக்கள் அரவிந்தன்
வித்தியாசமான சிந்தனையுடன் அழகான வரிகளுடன் ஒரு கவிதை..வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா.
நன்றாக உள்ளது நண்பரே...வெற்றி பெற வாழ்த்துக்கள்
//மொழியும் ஒளியும்
ஓய்வெடுக்கும்
சாமத்தின் நிலவறையில்//
நல்லாயிருக்குங்க
வெற்றி பெற வாழ்த்துகள்..!
மலிக்கா, பூங்குன்றன், புலவன் புலிகேசி, நாடோடி இலக்கியன் அனைவரின் வருகைக்கும் வாசிப்பும் பதிவிற்கு பெருமை சேர்க்கிறது. கருத்துகளுக்கு மிக்க நன்றி... மீண்டும் வருக...!!!
//குடை ராட்டினத்தில்
சுற்றிக்கொண்டிருப்பதால்
ஒருவரை ஒருவர்
விலகிச் செல்ல
ஒருவழியுமில்லை...//
அழகிய படைப்பு.. வெற்றி பெற வாழ்த்துகள்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்
கவிதை ரொம்ப நல்ல இருக்கு !!! வாழ்த்துக்கள்
@புபட்டியன், @விதூஷ், @ஆழிமழை, @தியா வருகைக்கு நன்றி !
அழகான வரிகள் ஆனால் புரிந்துகொள்ள தாமதமாகின்றது. வாழ்த்துக்கள் ...
வெற்றி பெற வாழ்த்துகள்!
@அருண், @நாவிஷ் கருத்துகளுக்கு மிக்க நன்றி !
Post a Comment
கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.