வானொலியில் யாம்வளர்த்த
வான்தமிழே வந்தெங்கள்
வதைப்பட்ட வஞ்சியரின்
வேதனையைக் கேட்பாயா ?
கருத்தினிலே வீற்றிருக்கும்
கதிர்காமத் திருமுருகா
கற்பழிந்த கன்னியரின்
கண்ணீரைப் பார்ப்பாயா ?
வன்னியிலே விதைத்திருக்கும்
கண்ணியிலே விழுந்திடலாம்
கள்ளப்பயல் சிங்களவனனின்
கைகளிலே விழலாமா ?
கூவியழைக்கும் தூரத்திலே
கூடியிருக்கும் எம்தமிழர்
கூப்பிட்டால் வருவாரென
காத்திருந்த எம்மக்கள்
கதறிக்கதறி அழுவதுங்கள்
காதுகளில் விழவில்லையா ?
பெற்றதாய் பிணமாக
உற்றவளும் உரமாக
மானமுள்ள நானிந்த
மண்ணோடு போயேனோ ?
சமராட களமுமில்லை
காப்பாற்ற சனமுமில்லை
பயனற்ற பிறவியிங்கு
இருந்தென்ன மிச்சம் ?
இறந்தென்ன நட்டம் ?
- ஈழத்தில் பிழைத்துக் கிடக்கும் ஒரு(ஒரே) தமிழன்.
ஈழத்தில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலையில் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட கொடுரத்தை சாட்சிப்படுத்தியிருக்கும் புகைப்பட ஆவண நூல் 9-1-2011 அன்று சென்னை தி.நகரில் உள்ள செ.தெய்வநாயகம் பள்ளி வளாகத்தில் மாலை 3 மணி அளவில் வெளியாகிறது. நூலைப்பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள். இதனை உலகத்தில் மனசாட்சி உள்ள மனிதர்கள் அத்தனை பேரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும்.
தோழமையுடன்,
அவனி அரவிந்தன்.
+919791143693.
5 comments:
நெகிழ வைக்கிறது...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்
வலிக்கறது வார்த்தைகள்
வேடிக்கை மட்டுமே பார்க்கும் சமுகம்
என்று கை கொடுக்கும் ?
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே நீ முழங்கு
தமிழகம் இனியாவது விழிக்குமா
ஈழத்தில் பிழைத்துக் கிடக்கும் ஒரு(ஒரே) தமிழன்.
நெஞ்சை நெருஞ்சி முள்ளாய் குத்திய வார்த்தை..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
நல்ல அழம்பட்ட கவிதை.
Post a Comment
கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.