Thursday, February 18, 2010

நிழலோவியம் - கவிதை

 

மை தொட்ட ஈரங்கள்
இலையின் நுனிப் பனித்துளிகள்

இதழ் முத்தத்தின் சத்தங்கள்
மனதோடு பதிந்த
மென்ரகசிய ஒப்பங்கள்

மகரந்தம் செழித்த
தோட்டத்திலிருந்து
மலர்களை விடுத்து
இலைகளை மட்டும்
பறித்துச் செல்கிறேன்

கிளைபிரிந்த இலைகளை
உயிரின் சாரம் தெளித்து 
பராமரிக்கிறேன்

அலையாக ஆயிரம் முறை வந்து
வேர் வருடாமல் போனாலும்
மறுபிறவியில்
மழையாகப் பிறந்து வந்து
உச்சந்தலை நனைத்து
முக்தியடைகிறேன்

உன் விழிப்பறவையிட்ட
எச்சங்களே
என் மீதான வெளிச்சங்கள்
அது விட்டு வைத்த
மிச்சங்களில் ஒளிந்திருக்கிறது
உனக்கான எனது ஓவியம்
நிழலாக!

-
அன்புடன்
அவனி அரவிந்தன்.

வெளியிட்ட சென்னை ஆன்லைனுக்கு நன்றி !
http://www.chennaionline.com/tamil/literature/poem/newsitem.aspx?NEWSID=aafc7717-1b34-49e5-b2a5-7926808fa8a7&CATEGORYNAME=kavi